கரூர் மாவட்டம் நடையனூர் பகுதியில் உள்ள கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் உபரி நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை முழுமையாக அகற்றி உபரி நீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.