சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் மற்றும் புறவழிச் சாலையில் உள்ள அ.மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே போலீசார் அடிக்கடி ரோந்து சென்று இதுபோன்று கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.