பண்ருட்டி தாலுகா மேலிருப்பு கிராமம் தெற்கு தெருவில் உள்ள தெருமின்விளக்கு ஒன்று கூட எரிவதுயில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் தெருவில் நடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடு்ம் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மின்விளக்குளை சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.