ரிஷிவந்தியம் ஒன்றியம் சுத்தமலை கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் திறப்பு விழா காணவில்லை. மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதை கழித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க திறப்பு விழா காணாமலேயே அந்த கட்டிடம் சிதிலமடைந்து வருகிறது. எனவே கிராம மக்கள் நலன் கருதி சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.