சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே ஒப்பாறைப்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மின் கம்பிகள் மரத்தை உரசியவாறு செல்வதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த மரக்கிளையை அகற்றி உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-எம்.முருகேசன், ஒப்பாறைப்பட்டி, சேலம்.