மதுரை மாவட்டம் மேல அனுப்பனாடி ஹவுசிங் போர்டு சாலையில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும்.