தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி பூச்சூரில் ஏரியூர்- மேச்சேரி சாலையின் ஓரம் உள்ள கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை மூடி போட்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், பூச்சூர், தர்மபுரி.