கிருஷ்ணகிரி நகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி 5 ரோடு, பெங்களூரு சாலை, சென்னை சாலைகளில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாக்கடை நீருடன் தேங்கி நிற்கிறது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வாரி மழை நீர் சாலைகளில் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராம்குமார், கிருஷ்ணகிரி.