தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மார்க்கெட் பாலக்கரை பகுதியில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் கூட்டமாக சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மாடுகள் மீது மோதி அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், கால்நடைகள் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களையும் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?