திருவாரூர் மருத்துவக்கல்லூரி வளாகத்துக்குள் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை மருத்துக்கல்லூரிக்கு வருபவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக மருத்துவக்கல்லூரிக்கு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி குப்பைகளை கிளறி வழிப்பாதைகளில் போட்டுச்செல்கின்றன. குப்பைகள் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?