திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா மருதவாஞ்சேரி அருகே பூந்தோட்டம்-கும்பகோணம் செல்லும் சாலை, கோவில்பத்து செல்லும் சாலையோரத்தில் கழிவுகள் அதிகளவில் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சாலையில் பயணம் செய்கின்றனர். கழிவுகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?