பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

Update: 2022-10-09 15:03 GMT
பெங்களூரு ஓ.எம்.பி.ஆர். லே-அவுட், 4-வது கிராஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த சாலையை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்