பெங்களூரு பெல்லந்தூர் சர்வீஸ் சாலையில் இப்லூர் பகுதியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சிறிய ரக கேபிள் வயர்கள் போடப்பட்டுள்ளன. இந்த வயர்களால் அந்த பகுதியினர் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையில் கிடக்கும் வயர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.