புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, அரசமலை வட்டம், கோனூர் ஊராட்சி பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாயில் அனுமதியில்லாமல் சிலர் செங்கல் சூளைகளுக்கு மண் எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.