கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இருந்து இருகூர் செல்லும் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனருகில் நீரோடை செல்கிறது. இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. மேலும் அந்த நீரோடை புதர் மண்டி கிடக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கண்டு, சுகாதாரத்தை பேண அதிகாரிகள் முன்வர வேண்டும்.