சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2022-10-09 11:11 GMT
  • whatsapp icon

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் என்பது பிரதானமானதாக உள்ளது. இந்த நிலையில் குன்னூர் காந்திபுரம் பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் வீடுகளுக்கு கொண்டு வந்து சப்ளை செய்யப்படுவது இல்லை. வாடிக்கையாளர்களே சாலையில் இருந்து தூக்கி வரும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்