தேவூர் அருகே கோணக்கழுத்தானூரில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் சாலையில் குறுக்கே கால்வாய் பாலம் உள்ளது. இந்த கால்வாய் பாலத்தின் வழியாக எல்லப்பாளையம், கல்லம்பாளையம், குறுக்குபாறையூர் உள்பட பல்வேறு கிராமப்புற விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் தினமும் தேவூர் நகர பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கால்வாயில் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இளவரசன், தேவூர்.