திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் செல்வோரை கடிக்க முயற்சிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜூ, திக்கணங்கோடு.