பெங்களூரு லக்கெரே பகுதியில் எம்.இ.ஐ. காலனியில் சாலை பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த பாலம் தற்போது சேதமடைந்துள்ளது. மேலும், அதன் அருகே உள்ள சாலையும் லேசான சேதம் அடைந்துள்ளது. அதனை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.