பெங்களூரு மாருதி சேவாநகரில் அய்யப்பன் கோவில் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சிலர் தங்கள் சைக்கிள்களை நிறுத்தி உள்ளனர். இது பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.