பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியில் தனியார் பஸ் அலுவலகம் உள்ளது. அதன் அருகே உள்ள நடைபாதையில் கழிவு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.