சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.