தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூதநத்தம் ஊராட்சியில் குண்டல்மடுவில் திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த கிணறு அரசு பள்ளி அருகில் அமைந்துள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் காணப்படும் இந்த கிணற்றில் பள்ளி குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பயன்பாடு இல்லாமல் உள்ள கிணற்றை ஊராட்சி நிர்வாகம் மூட வேண்டும் அல்லது கிணற்றுக்கு இரும்பு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.