நாகர்கோவில் பார்வதிபுரம் பெருவிளயைில் முத்தாரம்மன் கோவில் பச்சைகுளம் உள்ளது. சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, பெருவிளை.