நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேளாங்கண்ணி கடற்கரையில் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு எச்சரிக்கை செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் குளிக்கசெல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடற்கரைக்கு வருபவர்கள் ஆபத்தான குளியல் மேற்கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?