நாமக்கல் - துறையூர் சாலையில் 4 ரோடு பகுதியில் பஸ் நிறுத்தில் இருந்து ஏராளமானோர் பஸ்சில் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோல் பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நிழற்கூடம் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?