கரூர் மாவட்டம், மரவாபாளையம் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதை வழியாக ஏராளமான பயணிகள் ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. ரெயில்வே பாதைக்கு பின்புறம் மதுரை வீரன் நகர், மகாத்மாகாந்தி நகர், நாடார்புரம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம் என பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருந்து வருபவர்கள் தங்களின் குழந்தைகளை மரவாபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து வருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் ரெயில்வே பாதையை கடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தங்களது வீடுகளுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் செய்பவர்கள் ரெயில்வே பாதை வழியாக இரு சக்கர வாகனத்தை தூக்கிச் சென்று செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரெயில்வே பாதைக்கு அடியில் குகை வழி பாதை அமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.