பெங்களூரு கும்பாரபேட்டை பகுதியில் உள்ள சாலை கடந்த சில தினங்களாக சேறும், சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் கார்கள், வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சேற்றில் தவறி விழும் நிலை உள்ளது. அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?