பெங்களூரு ஸ்ரீராமபுரம் 6-வது கிராஸ் பகுதியில் பாதாளசாக்கடை மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும் முன்பு அந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய வேண்டும்.