நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில் உள்ள பஸ் நிலையம் அருகே இளங்கடம்பனூர் செல்லும் சாலையோரத்தில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலுக்கு முறையான தடுப்புச்சுவர் இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவம் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முகமது பாரூக்