
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்து நேற்று மாலை 6 15 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டது. ஆனால் அந்த பஸ்ஸில் முன் பக்கத்தில் உள்ள பெயர் பலகையில் விளக்கு வெளிச்சம் இல்லாததால் எந்த ஊர் செல்கிறது என்பதை அறியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். எனவே பெயர் பலகை தெரியும் வகையில் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.