கோத்தகிரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகள் கடந்த பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுவதுடன் கட்டிடத்தின் மேற்பகுதி முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குடியிருப்புகளுக்குள் ஈரப்பதம் ஏற்பட்டு கட்டிடத்தில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. எனவே பலுதடைந்த குடியிருப்பு கட்டிடத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.