குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா?

Update: 2022-10-02 18:45 GMT
திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி பெருங்கண்ணன்குளம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல தண்ணீா் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது 3 நாட்களுக்கு மேலாக நம்பியாற்று தண்ணீரும் வரவில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்