பாபநாசத்தில் இருந்து தென்காசி வழியாக மதுரை, குமுளி, ராஜபாளையத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் தென்காசி மாவட்டம் கடையம் பஸ் நிலையத்திற்குள் வருவது இல்லை. மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றது. இதனால் இந்த பஸ்சுக்காக பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் நிலையத்தில் காத்துகிடந்து ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே மேல குறிப்பிட்ட பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?