ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடுவனூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் இந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.