சேலம் அஸ்தம்பட்டி அவுசிங் போர்டு வசந்தபுரம் வீதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், அஸ்தம்பட்டி, சேலம்.