நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு இந்திரா நகரில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பிற அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. எனவே அந்த பகுதியில் சாலை உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.