மரக்காணம் அருகே கந்தாடு பகுதியில் உப்பளம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்த நிலையில் உப்பு குடோன் உள்ளிட்ட கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் அங்கு தற்போது உப்பு உற்பத்தி செய்யப்படவில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க உப்பளத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.