போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும்

Update: 2022-07-15 10:59 GMT

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா பேரளம் நகரில் தபால் நிலையத்தில் ஆதார் சேவை பிரிவு உள்ளது. ஆனால் ஆதார் சேவை பிரிவில் பணிபுரிய போதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படவில்லை. இதனால் ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ள அருகில் உள்ள பூந்தோட்டம் அல்லது மயிலாடுதுறை செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேரளம் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை பிரிவு மையத்தில் போதிய ஊழியர்களைநியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்