திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பார்க்கும் இடமெல்லாம் சாலையோரம் பதாகை நிறைந்து காணப்படுகிறது. இதற்குத்தான் பதாகை வைக்க வேண்டும் என்ற நெறிமுறை இல்லை. இதனால் எங்கும்நீக்கமற பதாகை நிறைந்து விட்டது. பலத்த காற்று வீசும் போது பதாகைகள் கீழே விழுந்து, வாகன ஓட்டிகளை பதம் பார்த்து விடுகிறது. வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது. எனவே அனுமதி பெறாமல் பதாகை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்.