சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பள்ளத்தாதான்னூர் கிராமம் இந்திரா நகர் காலனி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உடலில் காயத்துடன், நோய்கள் தாக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விமல்குமார், பள்ளத்தாதனூர், சேலம்.