புதிய தார்ச்சாலை போடப்படுமா?

Update: 2022-09-30 16:27 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் , பூதக்கால், நச்சிலிப்பட்டி, கருவங்காடு ஆகிய மலைக்கிராமங்கள் செல்வதற்கு
டாப் செங்காட்டுப்பட்டி அருகிலுள்ள புத்தூர் மலைக் கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஒன்றிய தார் சாலை உள்ளது. இந்த தார் சாலை கடந்த முறை பெய்த மழையில் குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்