தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி ஆலடிக்குமுளை கிராமத்தில் புறவழிச்சாலை இணையும் இடத்தில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் எழுத்துபிழை உள்ளது. அதாவது ஆலடிக்குமுளை என்ற வார்த்தையில் "ளை" என்ற சொல்லுக்கு பதில் "லை" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவறான அர்த்தத்தை குறிப்பிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பெயர் பலகையில் உள்ள எழுத்துபிழையை திருத்த நடவடிக்கை எடுப்பார்களா?