கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி வரும் உள்ளுர் சுற்றுலா பயணிகள் இந்த பஸ்நிறுத்ததுக்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பயணிகள் பெரும் அச்சத்துடனேயே நிற்கின்றனர். எனவே, சேதமடைந்த பஸ்நிறுத்தத்தின் மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணபிள்ளை, நாகர்கோவில்