அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-09-30 14:56 GMT
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி ஓமாந்தூர் கிழக்கு வாரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்