அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைவீதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.