ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஆதாம் நீரூற்று மற்றும் அதனை சுற்றி உள்ள அமைப்பு, முக்கோண வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தங்களது வாகனங்களை அவசரத்துக்கு திருப்பி செல்ல முடியவில்லை. மேலும் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அந்த ஆதாம் நீரூற்று மற்றும் அதனை சுற்றி உள்ள அமைப்பை வட்ட வடிவில் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.