கோவை சின்னியம்பாளையம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தில் கடந்த ஓராண்டாக குரங்கு ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த குரங்கு, அங்கு விளையாடும் குழந்தைகளின் கையில் இருக்கும் தின்பண்டங்களை பறித்து அட்டகாசம் செய்கிறது. மேலும் கொடுக்க மறுக்கும் குழந்தைகளை தாக்க முயன்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவே அச்சமாக உள்ளது. எனவே குரங்கை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முன்வர வேண்டும்.