வேப்பூர் தாலுகா திருநெசலூா் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் பிரியா்கள் மதுகுடித்து விட்டு போதை தலைக்கு ஏறியதும் ஆபாசமாக பேசுகிறார்கள். மேலும் அடிக்கடி தகாராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் ஒரு வித அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.