மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவினிப்பட்டி ஊராட்சி பகுதியில் நீண்ட நாட்களாக அரசு இ-சேவை மையம் செயல்படாமல் பெயரளவில் மட்டும் பெயர் பலகையுடன் உள்ளது. ,இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதல் போன்ற அரசின் இணையதள சேவைக்கு பொதுமக்கள் மேலூர் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இத்துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு இ-சேவை மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?